மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் கீழ் அம்பி பகுதியில் கலந்து கொண்டார்.
முன்னதாக நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக தலைவர் அங்கு வயல்களில் இறங்கி வேலை செய்யும் மக்களோடு வயலில் இறங்கி…. விவசாயிகளிடம் இந்த சட்டமசோதா குறித்து வினவினார். தற்போது சமூக இடைவெளியுடன் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.