Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. அராஜகம் செய்யுறாங்க… முக்கிய முடிவு எடுத்த ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பொருள் : உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல்கள் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் கழகத்தினர் மீது காவல்துறையை ஏவி பொய் வழக்குப் போடும் அராஜக நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று திமுக தலைவர் முக .ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |