சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகமும் , திமுக சார்பில் ஆக்கட்சி பொருளாளர் மகன் கதிர் ஆனந்த்_தும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மாலையோடு தேர்தல் பரப்புரை முடியயுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அணைக்கட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் , தமிழகத்தில் ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் முழுக்க முழுக்க பொய் பேசுகின்றார்.
இந்த தேர்தல் நிறுத்தப்படத்திற்கு காரணம் திமுக தான். திமுக வேட்பாளருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக 10 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்து தேர்தலை நிறுத்தியுள்ளது.சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதலவர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.