செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது.
அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் இந்த அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் நிறுத்தி வருகின்றது. அதோடு மட்டுமல்ல, அருமை அண்ணன் எடப்பாடியார் சொன்னது போல, அவர் கொண்டு வந்த திட்டங்களைத் தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் இருக்கின்ற தமுக்கம் கலையரங்கம் 50 கோடி ரூபாய் திட்டத்தில் தமுக்கம் கலையரங்கு திறக்கப்பட்டு இருக்கிறது. உண்மையிலேயே எங்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி என்னவென்று கேட்டால், அம்மா உணவகத்தை மூடியது போல், அம்மா மினி கிளினிக்கை மூடியது போல் மண்புமிகு எடப்பாடியார் கொண்டு வந்த சாலை வசதிகளை, உயர்மட்ட பாலங்களை , இது போன்ற கட்டிடங்களை நிறுத்தாமல் திறந்து வைப்பதற்காகவாவது நீங்கள் வந்தீர்களே என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமுக்கம் கலையரங்கம் நான் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றபோது தொடங்கப்பட்ட பணி விரிவாக்க திட்ட பணி தொடர்ந்து வடக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது நிதியினை பெற்று, கலையரங்கத்தை தொடங்கி இன்றைக்கு அந்த கலையரங்கம் முழுமையாக, அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது அதனை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார்.
அதனைப் போன்று பல்கலைக்கழகத்தில் எதிர் இருக்கின்ற உயர்மட்ட பாலம் அண்ணா திமுக காலத்தில் மாண்புமிகு எடப்பாடியார் கொண்டு வந்த திட்டம், அதுவும் முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார். அதோடு 20 கோடி ரூபாய் திட்டத்தில் ஒரு மருத்துவ உபகரண ஆய்வுக்கூடங்கள் திறக்கப்பட்டது. அதுவும் அண்ணா திமுக காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என பெருமிதம் கொண்டார்.