தமிழக கூட்ட பேரவை தொடர் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் அமளிஇல் ஈடுபட்டதோடு கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டு அறிக்கைகளுக்கு பயந்து 1989 ஆம் ஆண்டு நடந்தது போல மீண்டும் நடத்த திட்டமிட்டு உள்ளீர்கள் என கடுமையாக பேசிய சபாநாயகர் அப்பாவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களை இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து அவையில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார் அதன் பிறகு சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு நாளாக மாறியது.
இதனையடுத்து அவையில் இருந்து வெளியேறிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக சபாநாயகர் பழிவாங்க நினைக்கிறது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என்ற நீதிமன்றம் தீர்ப்பு சபாநாயகர் மதிக்கவில்லை. திமுக அரசு மீது மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளதால், இந்தி திணைப்பை எதிர்ப்பு தீர்மானத்தை திமுக கையில் எடுத்துள்ளது. திமுகவின் “பி” டிம்மாக பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். அருணா ஜெகதீசன் ஆணையம், தூத்துக்குடி விசாரணை ஆகியவற்றை அமைத்ததை நாங்கள் தான் பிறகு ஏன் பயப்பட வேண்டும். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொல்லைப்புற மூலமாக பழி வாங்குகிறார். திமுக ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதி திட்டங்கள் அம்பலம் ஆகியுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் 30 நிமிடம் தனியாக பேசி உள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.