தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறுகையில், .
கொரோனா பரவுகின்ற சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை மனதில் வைத்து மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும். அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முக கவசம் அணியுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். பயம் மட்டும் வேண்டாம் இது குணப்படுத்தக் கூடிய நோய்தான். இது கஷ்டமான காலம் தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல. நோய் நாடி அதன் காரணம் அறிந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்திவிடலாம் என ஸ்டாலின் நம்பிக்கையுட்டினார்….