எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும் தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான் போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச நான் விரும்பல . எனக்கு வந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியமே இல்லை.
நான் நாற்பது வருஷமா அரசியலில் இருக்கின்றேன் சட்டமன்ற உறுப்பினராராக , சென்னை மாநகரத்தின் மேயராக , உள்ளாட்சி துறை அமைச்சராக , துணை முதலமைச்சராக ,திமுகவின் தலைவராக இருக்கிறேன். எனக்கு விளம்பரம் அவசியம் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட நாலஞ்சு நாளா பெரிய மழையால் கூடலூர் சட்டமன்ற தொகுதியை காணாம போய் இருக்க கூடிய சூழ்நிலை. இன்னைக்கு பெரிய ஆபத்து , பேராவது ஏற்பட்டதற்கு இதுவரைக்கும் முதலமைச்சர் போயி பாக்கல.அதுக்கு துப்பு இல்ல , துரும்பு இல்ல விமர்சனம் பண்றதுக்கு யோகி வந்திருக்கு பாராட்டுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.