விக்ரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவா திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக_வுக்கு பிரசாரம் செய்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும். வன்னியர் மக்கள் அதிகமாக இருக்க கூடிய பகுதி என்பதால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து முக.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் கேட்டுளார்.
விக்ரவாண்டி தொகுதியை பொறுத்த வரைக்கும் அதிமுக , திமுக_வுக்கு இணையான வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சியும் வைத்துள்ளது.அதனால் அங்கே வன்னிய இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதால் தேர்தலில் வெற்றிபெற இவங்கள் நமக்குத் தடையாக இருப்பார்கள். இவர்களுடைய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று சொன்னால் திருமாவளவன் நம்ம கூட்டணியில் இருப்பதை காட்ட கூடாது என்று சொல்லியுள்ளார் பொன்முடி. மேலும் திருமாவளவன் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் பாமக தனக்கு சாதகமாக பயன்படுத்தி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ”சரக்கு , மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு” என்று திருமாவளவன் பேசிய வசனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருகிட்டையும் சொல்லி வைத்துள்ளார்கள். திருமாவளவன் கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் நம்முடைய கதை ஒரேடியா முடிந்து விடும் என்று எச்சரிக்கையை பொன்முடியும் தெரிவித்துள்ளார். இதனால் தான் திருமாவளவன் பிரசாரத்துக்கு ஸ்டாலின் தடை விதிக்க உள்ளதாக தகவல் சொல்லப்படுகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு எல்லாம் இங்கு வெறும் நகைச்சுவை தான் எடுத்துப்பாங்க என்று திமுக நிர்வாகிகள் சொல்லி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.