மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை அடுத்து ,
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஞானதிரவியத்திற்காக ஆதரவாக பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் இவ்வாறு பேசினார், திமுக இந்துகளுக்கும் இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்ற பொய்யான பிரச்சாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். எல்லா மதத்திற்கும் பொதுவான கட்சி திமுக என்று பிரச்சாரத்தில் பேசினார்..
திமுக ஆட்சி அமைந்தவுடன், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்தும் கொடநாடு கொலை விவகாரம் குறித்தும் , பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்தும் தீவிர விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். தேர்தல் நேரத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாகக் குற்றம் சாட்டி பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் வந்த மறுகணம் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய ஆட்சி அமையும் என்று அவர் உறுதிபட கூறினார் .