Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை டேக் செய்து… டிவிட்டரில் பிராவோ உருக்கம்…!!!

டுவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பிரபலங்கள் பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து “தமிழ் நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார். கொரோனாவில் இருந்து மீள அனைவரும் மாநில அரசின் விதிகளை பின்பற்றுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்காக நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்திருந்தார்.

Categories

Tech |