Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை திருவண்ணாமலையில்…. பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்…!!

நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இதையடுத்து அடுத்த கட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருவண்ணாமலை பகுதியில் தொடங்க இருக்கிறார்.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று வணங்கி, மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று தன்னுடைய தாயாரிடம் ஆசி பெற்ற அவர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றுள்ளார்.

Categories

Tech |