Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் வேல் எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்… துரைமுருகன் கருத்து..!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசங்காரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருத்தணி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முக ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலுடன் முகஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து கோவையில் இன்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார் என்று பேசியிருந்தார். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் தர மாட்டார் என விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. இப்போதாவது காங்கிரஸ் தனித்து பிரச்சாரம் செய்வதாக முடிவு எடுத்ததற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |