Categories
மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

க.அன்பழகன் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். திமுக கட்சியின்  பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர்.  திமுக தலைவர் கருணாநிதியிடம் அதிக நெருக்கமாக இருந்தவர்.

 திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை, கழகப் பொதுச்செயலாளர் அன்பழனகனின் இல்லத்திற்கு நேரில் சென்று,  அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.  அப்போது கழகப் பொருளாளர் துரைமுருகன், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதிமாறன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தார். 

Categories

Tech |