சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது.
தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக திரை பிரபலம், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்தன. தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அதிமுக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதோடு இல்லாமல் இதை வைத்து திமுக அரசியல் செய்து வருவதாகவும் ஆளும் அரசு தெரிவித்து வந்தது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்!#JusticeforJayarajAndBennix#ArrestKillersOfJayarajAndBennix
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
இதுமட்டும் இல்லாமல் திமுக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்! என்று எச்சரிக்கை விடுத்தது. இதனை சுதாரித்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் செய்தியாளர்களை சந்தித்போது மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் திரு.ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கை நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐயிடம் ஒப்படைப்போம் என்று முதல்வர் தெரிவித்தார். இருவரின் கொலைக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது முதல்வரின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.