திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும். ஆனால் இவர் மாபெரும் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவர். நான், துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள் எல்லாம் சேர்ந்து பேராசிரியரிடம் சென்றோம், பேராசிரியரிடம் சென்ற போது….
கலைஞர் அவர்கள் கொஞ்சம் உடல் நலிவுற்று இருக்கிறார். இந்த கழகத்தை வழி நடத்துவதற்கு செயல் தலைவராக நம்முடைய தளபதி அவர்களை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அதைவிட வேறு என்ன ? அவர்தான் அதற்கு பொருத்தமானவர் உடனடியாக நியமியுங்கள் என்று சொல்லி எங்களுக்கு சொன்னதை நாங்கள் தலைவரிடம் சொல்லி செயல் தலைவர் ஆக்கியதும் தலைவர் பேராசிரியர் அவர்கள் தான்.
இதே செயல் தலைவராக இருந்தவரை தலைவராக முன்மொழிந்தவரும் பேராசிரியர் அவர்கள் தான். கிட்டத்தட்ட அவ்வளவு பெரிய வயதானவராக இருந்தாலும், நீண்ட பயணம் உள்ள பேராசிரியர்… தளபதி அவர்களையே தலைவராக ஏற்று பொதுச்செயலாளராக இருந்தவர் தான் பேராசிரியர் அவர்கள். எனவே தனக்கென்று பாராமல் இந்த இயக்கத்திற்காக….
இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், இந்த இயக்கம் இருந்தால் தான் இந்த நாடு நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்ற பேராசிரியர் அவர்கள், தளபதி அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டார். தலைவராக ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்த இயக்கத்தை வழிநடத்த முதலமைச்சராக வருவதற்கும் அவர்தான் பொருத்தமானவர் என்று அனைவரிடமும் சொல்லி, அனைத்து ஏகோபித்த ஒரு முடிவை நமது பேராசிரியர் அவர்கள் எடுத்து தந்தார்கள் என தெரிவித்தார்.