Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கம்யூனிச கோட்டைக்கு போன ”ஸ்டாலின்”… உடனே நேரில் வந்த ”பினராய் விஜயன்”… என்ன நடக்கிறது கேரளாவில் ?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் நடைபெறும் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவர் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில் எடுத்துக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் நாளை முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நீர் பிரச்சனைகள் அனைத்தையும் பேசுவதற்காக தான்

ஆனால் முன்கூட்டியே ஒரு மாநிலத்துடன் மட்டும் ( கேரளாவோடு ) முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்க அளவுக்கு குறித்த பிரச்சனை,  பேபி அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனை,  சிறுவாணி  பிரச்சனைகள் என்று பலவற்றையும் முன்கூட்டியே பேசி முடிப்பதால் நாளை ஒரு சுமுகமான விளைவு கிடைக்கும் என்று நம்பப்படலாம் என தெரிகிறது.

Categories

Tech |