சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேலூர் தொகுதி வெற்றி குறித்து முக. ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது வேலூர் வெற்றியை என்ன சொல்லுகின்றார்கள். லட்சக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது இது வெற்றி அல்ல என்று விமர்சிக்கின்றார்கள் என்று கூறிய ஸ்டாலின் என்னிடம் பல்வேறு புள்ளி விவரங்கள் இருக்கின்றது என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அப்போது கூறிய அவர் ,
ஆளுங்கட்சியாக இருக்கின்ற அதிமுகவில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் 4,000-த்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளனர். கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ 428 வாக்கு வித்தியாசம். கருவூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் 441 வாக்கு வித்தியாசம் ஆவடி அமைச்சர் பாண்டியராஜன் 1, 395 வாக்கு வித்தியாசம் , பேராவூர் துரைக்கண்ணு 49 வாக்கு வித்தியாசம் என குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.
திமுக வேலூரில் பெற்றது வெற்றி இல்லை என்றால் மானம் , சூடு , சொரணை , இருந்தா நீங்க குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்று விலகி இருக்க வேண்டாமா என்று கடுமையாக விமர்சித்தார்.நாங்கள் இடைத்தேர்தலில் 22 இடங்களில் 13 இடங்களில் வெற்றி பெற்ற்றுள்ளோம் இடைத்தேர்தல் நடைபெறும் போதெல்லாம் ஆளும் கட்சிதான் தொடர்ந்து வெற்றி பெறும்.ஆனால் அதை முறியடித்து எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கு என்று தெரிவித்தார்.