திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் பூக்களால் ஆண், பெண் இரண்டு கைகள் கொடுப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.