இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , திராவிட இயக்கம் பல்லாண்டு காலம் நிலைக்க வேண்டும் , தமிழர்கள் எல்லா உரிமையும் பெற வேண்டுமென நல்லெண்ணத்தில் அடிப்படையில் முக.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்கிறோம் . மத்திய அரசை மற்றவர்கள் எல்லாம் பயந்து அஞ்சும் நேரத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் , எந்த விளைவு வந்தாலும் சந்திக்கத் தயார் என்று நெஞ்சுரத்தோடு மத்திய அரசை விளாசி , அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . தலைவர் ஸ்டாலின் சுண்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து வேலை செய்ய தயாராக இருக்கின்றேன். TTV.தினகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை . அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து இன்னும் பலர் திமுக_வில் இணைவார்கள் என்று வி.பி கலைராஜன் தெரிவித்தார்.
Categories