Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜோசியம் பார்த்த ஸ்டாலின்…! பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி… குஷி மோடில் அதிமுக …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம்.

அதே மாதிரி புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி. அம்மாவுக்காக ஆதரவு கரம்  தந்து, புரட்சித்தலைவர்களுடைய இடத்திலே அம்மாவை உட்கார வைத்து அழகு பார்த்த மாவட்டம் மதுரை ஒன்றுபட்ட மாவட்டம். தேனி மாவட்டமாக இருந்தாலும், அது மதுரை மாவட்டத்தோடு இணைந்தது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக நம் தலைவர், நமது தலைவி. இன்றைக்கு அதற்கு அடுத்து….  அவர்களுடைய வழியில், அவர்களுடைய பாதையில்,  அவர்கள் என்ன நினைத்தார்கள் ? இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் ? புரட்சித்தலைவர் ரத்தத்தை வேர்வையாக சிந்தி தான் நினைத்ததை நடத்தி காட்டினார். அவர் ஒரு வார்த்தை சொல்லுவார் நாடோடி மன்னன் படத்தில்…

நான் மக்களோடு இருந்து மாடியை பார்க்கிறேன். சார் மாடியில் இருந்து மக்களை பார்க்கிறார் என்று அறைகோல்  விட்ட நமது தலைவருடைய வழியில்,  புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், நம்முடைய அண்ணன் அவர்கள் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார்.

திராவிட இயக்கம் என்று வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்திலே யாராவது ஜோசியம் பார்ப்பார்களா? இன்று இருக்கின்ற முதல்வர் அப்போது அதிமுக ஆட்சியை பார்த்து ஜோசியம் சொன்னார். அதிமுக ஆட்சி இன்று போய்விடும் , நாளை போய்விடும்,  அடுத்து போயிரும் என்று எல்லாம் சொன்னார்.

அத்தனையும் தவிடு பொடி ஆக்கிவிட்டு, நான்கரை ஆண்டுகள் சுப்லக்ஷணமான,  அற்புதமான ஆட்சியைக் கொடுத்த அண்ணன் அவர்களே மதுரை மண்டலத்திற்கு வருக. இதுதான் பிள்ளையார்ச்சுழி,  இனிமேல் அடிக்கு ஒரு முறை  வரை மதுரைக்கு வர வேண்டும். வரவேண்டும், வரவேண்டும் என்று உங்களை வரவேற்க காத்திருக்கிறேன் என வரவேற்றார்.

Categories

Tech |