Categories
அரசியல் மாநில செய்திகள்

சைக்கிளில் போய்…. கூட்டத்தோடு கூட்டமாக… சைலண்டாக ரசித்த ஸ்டாலின் ..!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,  வைகோவை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய, பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் அவர் கூட்டம் எங்கே நடந்தாலும்..  சென்னை சுற்றி இருக்கின்ற பகுதியில் எங்கே நடந்தாலும்.. தவறாமல் சைக்கிளில், ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கூட்டத்தை கேட்டு ரசித்தவன் நான். நெருக்கடி காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு,  தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சிறைச்சாலையில் அடைபட்டு இருந்தபோது, நான் சென்னையில் இருந்தேன்.

அண்ணன் வைகோ அவர்கள் பாளை சிறையில் ஓராண்டு காலம் அவரும் இருந்தார். எத்தனையோ சிறைச்சாலை, அதில் முக்கியமாக எனக்கு பசுமையாக மனதில் ஆழமாக பதிந்திருப்பது, அவர் மிசாவில் கைதாகி பாளை சிறையில் இருந்தபோது, எனக்கு கடிதம் எழுதுவார். சிறையில் இருந்து சென்னை சிறைக்கு, எனக்கு மட்டுமல்ல,

தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா சிறைச்சாலைகளுக்கும் கடிதம் எழுதிய ஒரு மனிதன் உண்டு என்று சொன்னால் அண்ணன் வைகோ, எல்லோரையும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி சிறை வாழ்க்கை என்பது என்ன என்பதை எடுத்து சொல்லக் கூடிய வகையில் அந்த கடிதத்தை படித்து நாங்க எல்லாம் மகிழ்ச்சி அடைந்தது, உணர்ச்சி அடைந்தது உண்டு என தெரிவித்தார்.

Categories

Tech |