Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு காது கேட்காது… நாங்க அழுத்தம் கொடுத்தோம்…. அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கின்றார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மு.க ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களிடமும் ஆளுநர் இதைத்தான் சொன்னார்… அனால் அமைச்சர்கள் உள்ளே நடந்ததை மறைத்து விட்டார்கள் என்று கூறி திமுக சார்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில்,

முக.ஸ்டாலின் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாரு. அவர் யாரோ எழுதி தரும் அறிக்கையை  விடுகிறார். எழுதித் தருவதை சொல்வதால் எப்படி காதில் கேட்கும், நிஜமாக காது கேட்காது.  ஆளுநரை சந்தித்து விட்டு…  வெளியே வந்து என்ன சொன்னேன் ?  7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு நம்முடைய கிராமபுறத்தில் இருக்கின்ற… அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு.

அவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பது கனவு. அந்தக் கனவின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கி, சட்ட மசோதா ஏற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரை பார்த்து அழுத்தம் கொடுத்தோம்.

இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதனை உணர்ந்து பார்த்து உடனே  நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்றோம். ஆளுநர் கண்டிப்பாக அப்ரூவல் கொடுப்பேன் என்றார். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று சொன்னார். அதனால் தான் விரைவில் நல்ல முடிவு வரும் என்றேன். விரைவில் என்ற வார்த்தையை சொன்னேன் என பதிலளித்தார்.

Categories

Tech |