அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. அதில் என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதில் என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது என்று கூறிய ஸ்டாலின், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக கூட்டணி கட்சிகள் கூட என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு என்றும் பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஏப்ரல் 1ம் தேதி பணி தொடங்கும் நிலையில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
இதையடுத்து என்.பி.ஆர்.-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து வெளிநடப்பு சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தனர். இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் தீர்மானம் போட மறுக்கின்றனர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.