தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்ட பிரிவை இரத்து செய்து ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் , திமுக மற்றும் இடதுசாரிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து திமுக டெல்லியில் போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து நெல்லையில் பேசிய ஸ்டாலின் கூறுகையில் , இந்த போராட்டத்தில் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் அனைவருமே பங்கேற்பார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை உரிமையோடு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இது இப்போது அல்ல. கலைஞர் , அறிஞர் அண்ணாவின் காலத்தில் இருந்தே திமுக செய்து கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார்.