ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு. அது ஒருபோதும் பலிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
வேலாயுதம்பாளையம், குன்னம் சத்திரம், க.பரமத்தி ஆகிய இடங்களில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் .
அப்போது தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் என்றும் அவரை நம்பினால் அனைவரையும் நடுத்தெருவில் விட்டு விடுவார் என்றும் கூறினார் .இவர் எந்த கட்சிக்கும் அதுபோல மக்களுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார் என்றார் .
எனவே வாக்காளர்கள், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக்கூறினார். மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என விமர்சித்தார் .