Categories
மாநில செய்திகள்

”நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ஜெத்மலானி” முக ஸ்டாலின் இரங்கல்.!!

நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி என்று முக ஸ்டாலின் புகழ்ந்து கூறியுள்ளார். 

ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார்.

Image result for Ram Jethmalani

மேலும் இவர் 2 ஜி , ஸ்பெக்ட்ரம் வழக்குகளிலும் வாதாடினார். இவர் மத்திய சட்ட அமைச்சர் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில் மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Image result for mk stalin sad

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி குடியரசு தலைவர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கருணாநிதியிடம் நெருக்கமான நட்பும், ஆழ்ந்த நேசமும் கொண்டிருந்தவர் ராம் ஜெத்மலானி. பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி என்று புகழ்ந்தார். மேலும்   மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.

Categories

Tech |