தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் கட்சிப் பணிகள்- சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகின்றார்.கொரோனா பேரிடர் காலத்தில் மாவட்ட அளவில் நிர்வாகிகள் மேற்கொண்ட கொரோனா தடுப்புப் பணிகளையும் முக.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கேட்டறிகின்றார்.