தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நாடாகும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார் ஸ்டாலின் கண்ட கனவு கனவாகத்தான் இருக்கும். நனவானது. திமுக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடிசம் தலைதூக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இதனால் திமுக வெற்றி பெறாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.