ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுப்பதாகவும் , இதனால் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக , திமுக சமபலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் திமுக வெற்றியை ஆளும் கட்சி தடுத்ததாக கூறி மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் ,
முதலமைச்சரின் மைத்துனர் வெங்கடேசன் வாக்கு எண்ணக்கூடிய மையத்தில் இருந்து செல்போனின் டைரக்சன் அடிப்படையில்தான் திமுக வெற்றியை அதிகாரிகள் , காவல்துறையினர் தடுக்கின்றனர்.இதை விடக் கூடாது. நீதிமன்றத்திற்கும் நாங்க போக ஏற்பாடு செய்திருக்கிறோம். அங்கிருந்து நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேவைப்பட்டால் இந்த தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.