உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் . சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு சென்ற போதும் கூட திமுக ஆட்சி வந்தவுடன் முதலில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தோம்.
தேர்தலை நடத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. அதிமுக தோல்வி பயத்தால் தேர்தல் நடத்த மாட்டார்கள் . புதிதாக மாவட்டங்கள் பிரித்துள்ளார்கள். இதை எப்படி உள்ளாட்சி அமைப்புகள் , ஊராட்சித் தலைவர்கள் , ஒன்றிய தலைவர்கள் என்று பிரிப்பார்கள் என்று தான் திமுக சார்பில் தேர்தல் கமிஷனரை சந்தித்துள்ளோம். அதில் இடஒதுக்கீட்டில் நீதிமன்ற வழிகாட்டலை எப்படி பயன்படுத்தப்போகிறீர்கள் என்று திமுக சார்பில் மனு அளித்துள்ளோம். தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக அணுகவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.