Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

அருந்ததியர் ஒதுக்கீடு ”எனக்கு கிடைத்த பெருமை” ஸ்டாலின் பெருமிதம்…!!

ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆங்கில படையை எதிர்த்து போரிட்டவர் ஒண்டிவீரன். அவருக்கு தலைவர் கலைஞரின் ஆட்சியில் தான் மணிமண்டபம் கட்டுவதற்கும் , அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கே அமைந்திருக்கிறது.  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி ,  வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை

Image result for ஒண்டிவீரன்

 வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அதை சட்டமன்றத்திலேயே தீர்மானமாகக் கொண்டு வந்து சட்ட வடிவம் நிறைவேற்றியது தலைவர் கலைஞர்.அந்நாளில் உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவருக்கு பதிலாக துணை முதலமைச்சராக நான் அந்த சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினேன். அது எனக்கு கிடைத்த பெருமை. அந்த பெருமையுடைய உரிமையோடு ஒண்டிவீரனுக்கு   மரியாதை செலுத்தி  மகிழ்ச்சி அடைகிறேன் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |