வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இறுதி நேரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் கேள்விக்கு பதில் தெரிவித்து அமைச்சர் தங்கமணி பேசுகையில் , நேற்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றும், அதன் பிறகே தேர்தல் அறிவிப்பு வெளியானதாகவும் பதிலளித்தார். மேலும் இனி வர்க்கூடிய நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும், உறுதியளித்த அமைச்சர் தங்கமணி, நேற்று வெளியான வேலூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.