கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தமிழக அரசு பல்வேறு முன்மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன.
மாநில அரசாங்கங்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி மக்களுக்கான தேவைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து. குறிப்பாக அந்தந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பல கோரிக்கைகளை முன்வைத்தன. தமிழகத்திலும் இந்த கோரிக்கைகள் பறந்தது. தமிழக அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்து எதிர்க்கட்சி திமுக விமர்சனம் செய்து கொண்டே வந்தது.
ஒரு கட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூட இது சரியில்லை, அது சரியில்லை என்று அறிக்கை விடுவதை விட்டு விடுங்கள். உங்களின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சி மக்களின் பணியை செய்ய வேண்டுமல்லவா? அதனை உணர்ந்து திமுகவும் பல்வேறு விஷயங்களை செய்ய சொல்லி ஆளும் கட்சியை விமர்சித்து வந்தது. இந்த நிலையில்தான் அம்மா உணவகத்தை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
மக்களின் நியாயமான கோரிக்கை தானே! என்று பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தனது நுட்பமான அரசியலை பயன்படுத்தி, அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான பணத்தை அந்தந்த மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் மொத்தமாக கொடுத்து விட்டனர்.
முகஸ்டாலின் ஆரம்பித்த அரசியல் ஆட்டத்தை, தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட எடப்பாடியின் அரசியல் சாதுரியத்தை பட்டவர்த்தமாக இது காட்டுகிறது. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு அரசு, ஆளுங்கட்சி மூலமாக எதிர்க் கட்சியான திமுகவின் வலியுறுத்தல் காரணமாக அம்மா உணவகத்தில் இலவச உணவு கிடைப்பத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.