Categories
அரசியல் மாநில செய்திகள்

”விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” மொத்தமாக களமிறங்கிய குடும்பம் …!!

ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 5 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்போதே திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்கள் பரப்புரையை தொடங்குகின்றார். கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து இந்த பிரச்சாரம் தொடங்குகின்றது. அதே போல திமுக மகளிரணி செயலாளர் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜனவரி 5ஆம் தேதி முதற்கட்ட பரப்புரையை தொடங்கியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த ஊரில், அண்ணா பிறந்த வீட்டில் இருந்து தேர்தல்  பரப்புரையை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |