ஸ்டாலின் மனைவியின் ஓட்டு அதிமுகவுக்கு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளா.ர் மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் கட்சி அதிமுக தான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விவசாயிகளுக்கு எதிராக பேசும் திமுக, எந்த மாதிரி சட்டங்கள் தமிழகத்திற்கு பொருந்தாது என்பதை உணர வேண்டும். போராட்டம் நடத்தியே ஓட்டு வாங்க வேண்டும் என்று விரும்பும் கட்சிதான் திமுக என்று கோபமாக கூறியுள்ளார். மேலும் உள்ளாட்சித் துறையில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்தது அதிமுக அரசுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி போடும் ஓட்டு கூட அதிமுகவுக்கு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.