பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்களின் அனைத்து ஆவணங்களிலும் ஆபத்து என்று பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் 42.44 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம்.
எனவே இவ்வாறு ஆபத்து என்று பதிவு செய்திருந்தால் பெயர் மாற்றும் போது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தொழிலாளர் கட்சியில் உள்ள Sarah Champion என்பவர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் நாட்டில் சுமார் 1,00,000 பாலியல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது கடவுச்சீட்டு அலுவலகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் அவர்கள் தப்பிக்க முடியாமல் ஆகும் என்று தான் கருதுவதாக கூறியிருந்தார்.
அவ்வாறு தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் முதலியவற்றில் ஆபத்து என்ற பதிவு இருந்தால், சிறுவர்களுக்கு நடைபெறும் குற்றங்கள் குறையும் என்று கூறியுள்ளார். அதாவது Della Wright(47) என்பவர் தன் 6 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதில் தொடர்புடைய நபர் 6 தடவை தன் பெயரை மாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.