Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நின்றுகொண்டே சாப்பிடாதீங்க”…. அதனால் எவ்வளவு ஆபத்து தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

இந்தியர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறை. அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டுச் சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது.

ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வரத் தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவத் தொடங்கிவிட்டது. இந்தப் பதிவில் நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம்.

நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாகக் கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும்.
பசி எடுத்தல்

மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்குப் பசி எடுக்கத் தொடங்கிவிடும்.

விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாகச் சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும்.

Categories

Tech |