இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அதிகமான மக்கள் பணத்தை இழந்துவிட்டதாகவும், இலவசமாக சமைத்த உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள். இலவச உணவை சேகரிப்பதற்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இதயமற்ற அரசாங்கம் மட்டுமே ஒன்றும் செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த தேசமும் உதவியற்ற நிலையில் இருக்கும் நிலையில், பொருளாதார மற்றும் தார்மீக கேள்விகளான மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதில் அளிக்க தவறி உள்ளனர் என ப. சிதம்பரம் கூறியுள்ளனர்.