Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு …! பயங்கர குஷியில் முதலீட்டாளர்கள்…!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகள்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்துவது பற்றி,பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. எனவே  ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பிசிசிஐ-க்கு சுமார் 2000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படு வாய்ப்புள்ளது. இதேபோல் ஐபிஎல் தொடரில் முதலீடு செய்துள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே இந்த தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் முதலீடு செய்துள்ள விளம்பரதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் ,நடந்து முடிந்த போட்டிகளுக்கு மட்டும் தொகையை கொடுத்தால் போதும் என்றும் , மொத்த தொகையையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ,என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மீதமுள்ள  ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது முதலீட்டாளர்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை போட்டுக் கொள்ளலாம் .அதற்கு விருப்பம் இல்லை என்றால் விலகிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது . எனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |