Categories
பல்சுவை

“STARS Vs TREES” 300 மடங்கு அதிகம்….. விண்வெளி பற்றிய வியப்பான தகவல்கள்…!!

பால்வெளி அண்டத்தில் ஒரு சிறிய புள்ளிகள் போல புலப்படும் விண்மீன்கள் தொலைவிலிருக்கும் சூரியன்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  நமது பால்வெளி அண்டத்தில் ஏராளமான சூரியன்கள், ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன்கள் உள்ளன. இவை வெகு தொலைவில் இருப்பதால் ஒரு சிறிய புள்ளிகளாக நமக்கு தெரிகிறது. பால்வெளி என்பது மிக அடர்த்தியான விண்மீன் தொகுதி. இந்த பால்வெளி அண்டத்தில் உள்ள ஒரு சூரிய குடும்பத்தில் இருக்கும் கோளில் நாம் வசிக்கிறோம். விண்வெளி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பின்வருமாறு காண்போம்.

சூரியன் மிகவும் பெரியது என்பதை நாம் அறிவோம். அதாவது ஒரு சூரியனுக்குள் நாம் 1 மில்லியன் பூமியை அடைக்கும் அளவிற்கு இடம் உள்ளது. பால்வெளி அண்டத்தில் சுமார் 400 பில்லியன் அளவிற்கு நட்சத்திரங்கள் உள்ளது. ஆனால் பால்வெளியில் இருக்கும் நட்சத்திரங்களை விட 300 மடங்கு அதிகமான மரங்கள் நமது பூமியில் உள்ளது. 55 Cancri e என்ற கோள் முழுக்க முழுக்க டைமனால் உருவானது. இந்த கோள் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதானது.

Categories

Tech |