Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்க நடவடிக்கை : தமிழகத்தில் இதுதான் முதல்முறை….. நெல்லையில் ஆரம்பம்….!!

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனாவுக்கு முன்புவரை ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண சிறந்த வழியாக திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவார்கள். அந்த வகையில்,

கொரோனா காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது கடந்த கடந்த மார்ச் 23ஆம் தேதிக்கு பிறகு எந்த திங்கள்கிழமையும் நடைபெறவில்லை. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மூன்றாம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://tirunelveli.nic.in   என்ற இணையதளத்தின் மூலம் குறைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |