Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

பழனி மலை கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கான ரோப்கார் சேவை இன்று மீண்டும் துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வருகைக்காக ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை வருடத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

Image result for ரோப் கார்

இதன்படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 1120 கிலோ எடையுடன் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் இயக்கிப் பார்க்கப்பட்டது. சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்த நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்பட்டுவருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |