Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு… நான் பயப்படுபவன் அல்ல…. உதயநிதி அதிரடி …!!

கைது செய்வதற்கு அஞ்சுபவன் நான் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழகமெங்கும் தி.மு.க இளைஞரணி, மாணவரணி போராட்டம் நடத்தியது. நேற்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அவர், சுட்டெரிக்கும் வெயிலில், இந்த கொரோனா காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதற்க்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் இந்த ஆர்ப்பாட்டம் எவ்வளவு முக்கியமான ஆர்ப்பாட்டம் என்பதை நீங்க தெரிஞ்சுக்கணும். நம்ம வீட்டு பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாதுனு காவி கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியாக வேண்டும் என்று நானும் மாணவரணி செயலாளர் அண்ணன் எழிலரசனும் பேசிக்கொண்டு இருந்தோம். ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திடுவோமா என அண்ணன் கேட்டாரு, நான் சொன்னேன் வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம், 20 நிமிடத்துல கலைஞ்சு போயிருவோம் வேணாம். எங்க இருக்கு ? அண்ணா பல்கலைக்கழத்தில் தானே பிரச்சனை. அதுக்கு முன்னாடியே ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று சொன்னேன்.

அவர் கைது பண்ணுவாங்கன்னு சொன்னாரு. பரவால்ல கைது பண்ணாலும் பண்ணட்டும். கைதுக்கு அஞ்சும் ஆல் நான் கிடையாது. எங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் போது கண்டிப்பாக நாங்கள் குரல் கொடுப்போம். ஏனென்றால் நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள். நம்முடைய தலைவர் வழியில் பயணிக்கின்றவர்கள். எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்றால் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக திரு. சூரப்பா அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு நியமனம் செய்யப்பட்டார். அப்போதே நம்முடைய தலைவர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஏன் தமிழ்நாட்டுல அறிஞர்கள் இல்லையா? படித்தவர்கள் இல்லையா? பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்து சூரப்பா அவர்கள் இங்கு நியமனம் செய்திருக்கிறார் என்று தலைவர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். இப்போ அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு. இதே சூரப்பா தான் கொஞ்ச நாள் முன்னாடி என்ன சொன்னாரு ? இன்ஜினியரிங் படிப்பதற்கு மகாபாரதத்தை படிக்க வேண்டும்  என்று சொன்னாரு. பகவத் கீதைக்கும் இன்ஜினியரிங் என்னங்க சம்பந்தம். நம்முடைய தலைவர் அவர்கள் தான் எதிர்ப்புக்குரல் தெரிவித்தார். நம்முடைய மாணவரணி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினாங்க. உடனே அந்த பாடத்திட்டத்தை எடுத்துட்டாங்க.

அதே மாதிரி இட ஒதுக்கீடு. இந்த அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு உயர்வு அந்தஸ்து அப்டினு கொடுக்கிறார்களாம். ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று இருக்கக்கூடிய சிறப்பான அறிஞர்களையும், படித்தவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இவங்க சிறப்பு அந்தஸ்து கொடுக்கலாம். ஏற்கனவே இங்க இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய அறிஞர்களை உருவாக்கிக்கொண்டு கொடுத்திருக்கிறது நம்முடைய அண்ணா பல்கலைக்கழகம். அதுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு இவங்க யாரு? இப்படி சிறப்பு அந்தஸ்து குடுத்தாங்கண்ணா.  அண்ணா பல்கலைக்கழகம் கேம்பஸ் உள்ளேயே நம்ம போக முடியாது என உதயநிதி தெரிவித்தார்.

Categories

Tech |