கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்று வருகிறது. பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் அனைவரும் வருகை தந்த பின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உருவம் பொறித்த நினைவுப்பரிசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வழங்கினார். அதை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மம்தா பானர்ஜி அவர்கள் கலைஞர் உருவம் பொறித்த நினைவுப்பரிசை வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.