சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ் ,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,மீனா,குஷ்பூ,இயக்குனர் சிவா,இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன்,பேட்ட ஆகிய படங்களில் ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.