Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

25லட்சத்தில் தொடங்கப்படும்… ஆக்சிஜன் மையம்… சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் மையம் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அருகே உள்ள சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பு தேவையான அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆய்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், ராசிபுரம் நகராட்சி ஆணையர் குணசீலன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், மாவட்ட திமுக பொருளாளர் செல்வம், ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |