பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் வெளியூர்களில் இருந்து மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கே.கே நகர், மாதவரம், பூவிருந்தவல்லி ஆகிய ஐந்து பேருந்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து 270 சிறப்பு பேருந்துகள் உட்பட 2226 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க இதுவரை ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.