டெல்லியில் காற்று மாசுபாடு மிக கடும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்கிறது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது.
டெல்லியில் சுத்தமான காற்றை OXY PURE என்ற விற்பனை மையத்தை உருவாக்கி விற்பனை செய்துவரும் அவலமும் நிகழ்கிறது. அங்குள்ள சக்கெட் பகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை மையத்தில் 300 ரூபாய் முதல் சுத்தமான ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது. இதே போன்று இந்த ஆக்சிஜன் பல்வேறு நறுமணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.அதற்கு ஏற்ப விலை மாறுபடும் எனவும் அந்த விற்பனை மையம் தெரிவித்துள்ளது.