Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |