Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தாறுமாறாக வண்டி ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர்….. போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

சென்னை பல்லாவரம் பகுதியில்  மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி வந்த  அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த அனகாபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகரப் பேருந்து திடீரென எதிரே வந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடில்லாமல்  மோதியது. இதையடுத்து பேருந்தை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததை கண்டுபிடித்ததையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

பின்  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மதுபோதையில் இருந்த ஓட்டுநர் அனகாபுதூரைச் சேர்ந்த ஜோதிலிங்கம் என்பது தெரியவர, ஓட்டுநர் மீது பொதுமக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்த பின் அங்கிருந்தோர்  கலைந்துச் சென்றனர்.

Categories

Tech |